திண்டுக்கலில் 14 வயது சிறுமியை மணந்த 39 வயது நபர் கைது..!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்து அழைத்து வந்து மாடு மேய்க்கவிட்டு கொடுமைப்படுத்தி வந்த 39 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
பெரியப்பா பராமரிப்பில் இருந்த ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த சிறுமியை விராலி பட்டியை சேர்ந்த 39 வயதான வெங்கடேசன் என்ற நபருக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து வைத்துள்ளனர். அன்று முதல் சிறுமியை பாலியல் ரீதியாகவும், வீட்டு வேலை செய்ய வைத்தும் மாடு மேய்க்க வெங்கடேசன் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
அவரிடமிருந்து தப்பி சொந்த ஊரான அல்லிநகரம் வந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் அவரது பெரியப்பாவும் திருமணம் செய்த வெங்கடேசனும் கைது செய்யப்பட்டனர்.






