திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் புதிய திரைப்படங்களை வெளியிட வேண்டாம்..!
திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் புதிய திரைப்படங்களை வெளியிட வேண்டாமென தயாரிப்பாளர்களுக்கு நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார்.
அதில் திரையரங்குகளில் பொருத்தப்பட்டுள்ள ப்ரோஜெக்டர்களுக்கு விபிஎஃப் கட்டணத்தை நீக்கினால் மட்டுமே புதிய படங்களை வெளியிடுவோம் என்று நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதை மற்ற சங்கத்தில் உள்ள தயாரிப்பாளர்களும் பின்பற்றுமாறு பாரதிராஜா கோரிக்கை வைத்துள்ளார். விபிஎஃப் கட்டணம் குறித்த பிரச்சினைக்கு ஏற்கனவே தயாரிப்பாளர்கள் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
ஆனால் அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான பாரதிராஜா அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.






