இட்லி, சாம்பார், டிக்கா தான் எனக்கு பிடித்த உணவு எனக்கூறிய கமலா ஹாரிஸ்..!
இட்லி, சாம்பார் மற்றும் டிக்கா ஆகியவை இந்திய உணவு வகைகளில் தனக்கு பிடித்தமானவை என்று அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியா செனட் சபை உறுப்பினரான 55 வயதாகும் கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் முதல் இந்திய வம்சாவளி மற்றும் முதல் கறுப்பினப் பெண் என்பதால் அதில் கவனம் மேற்கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
விருப்பத்திற்குரிய உணவு பற்றி கமலாஹாரிஸ் எழுப்பிய கேள்விக்கு தென்னிந்திய உணவுகளில் இட்லி மற்றும் சுவையான சாம்பார் விருப்பமான உணவு என்று வட இந்திய உணவு வகைகளில் எந்த விதமான பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
தினமும் காலையில் உடற்பயிற்சி, குழந்தைகளுடன் பேசுவது, சமைப்பது போன்றவற்றால் தனது மனதை உற்சாகமாக வைத்து இருப்பதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
பெண்கள் தங்கள் முடிவுகளை எடுக்க யாரின் அனுமதியையும் பெற வேண்டியதில்லை என்பதே அவர்களுக்கான தனது அறிவுரை என்றும் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.






