சென்னையில் கஞ்சா வாங்கி விற்பனை செய்த 3 மாணவர்கள்..!
சென்னையை அடுத்த எண்ணூரில் கல்லூரி கட்டணம் செலுத்த கஞ்சா வாங்கி விற்பனை செய்த 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். எண்ணூர் ஒரு விரைவு சாலையில் தாழமுக்கம் கடற்கரையில் போலீசார் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா வைத்துக் கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த 3 தனியார் கல்லூரி மாணவர்கள் கஞ்சா வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும் அந்த பணத்தில் அவர்கள் கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கு முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.






