--- --:--:-- --

14 வயது மகளுக்கு தந்தை பாலியல் தொந்தரவு.கண்டு கொள்ளாத தாய்.இருவருக்கும் ரூ.1000 அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!!

15

கோவை மாவட்டம் ஆனைமலை காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்தும் அவர் கண்டு கொள்ளாததால் சிறுமி பள்ளி ஆசிரியரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

 

அதன் அடிப்படையில் ஆனைமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் போக்சோ சட்டத்தின் கீழ் பெற்றோர்கள் இருவரையும் ( அம்மா , அப்பா) கைது செய்து சிறையில் அடைத்தார்.

 

இவ்வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் தாய்,தந்தை இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 1000/- அபராதம் விதித்து நீதிபதி ராதிகா அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

 

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் மற்றும் நீதிமன்றத்தில் சாட்சிகளை ஆஜர்படுத்தி திறம்பட பணியாற்றிய நீதிமன்ற தலைமை காவலர் செந்தில் ஆகியோரை கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருளரசு வெகுவாக பாராட்டினார்கள்.

 

14 வயது மகளுக்கு தந்தை பாலியல் தொந்தரவு.கண்டு கொள்ளாத தாய்.இருவருக்கும் ரூ.1000 அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon