--- --:--:-- --

மதுரையில் லாரியுடன் ஆற்றுக்குள் விழுந்த விபத்து..!

12

துரை ஆரப்பாளையம் அருகே சிமெண்ட் கலவை இயந்திரம் லாரியுடன் ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியானார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

மாலையில் பெத்தானியாபுரம் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த டிரைவர் மானாமதுரை தாளமுத்து, மாரீஸ்வரன் அங்கிருந்து 30 அடி பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக சிமெண்ட் கலவை லாரியுடன் விழுந்தனர்.

 

மாரீஸ்வரன் நிகழ்விடத்தில் பலியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட தாளமுத்து மதுரை ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon