--- --:--:-- --

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்..!

1.1

த்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராம்விலாஸ் பஸ்வான் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்தவர் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார். ராம்விலாஸ் பஸ்வான் ஒவ்வொரு ஏழையின் வாழ்வில் ஒளியேற்றி நோக்கத்தில் பணியாற்றியவர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

ராம்விலாஸ் பஸ்வானின் மறைவு வேதனை அளிப்பதாகவும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.ஏழை எளியவர்கள் மற்றும் நலிந்தவர்களின் குரலாக இருந்தவர் மறைந்துவிட்டதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

 

ராம் விலாஸ் பஸ்வான் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் சமூகநீதியின் உறுதிமிக்க தூண் சாய்ந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

 

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட ராம்விலாஸ் பஸ்வான் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். ஏழை எளிய மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் பஸ்வான் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நினைவு கூர்ந்துள்ளார்.

 

பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் தலைவராக விளங்கியவர் பஸ்வான் என குறிப்பிட்டுள்ளார். சாதி ஒழிப்பு, சமூகநீதி, சுயமரியாதை உணர்வில் என்றும் உறுதியாக இருந்தவர் ராம்விலாஸ் பஸ்வான் என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார்.

 

படிப்படியாக உயர்ந்து பதவியேற்ற துறைகளின் மூலம் மக்களுக்கு பல நன்மைகளை செய்தவர் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon