--- --:--:-- --

கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு காதல் திருமண விவகாரம் : மனைவி சவுந்தர்யாவை ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!!

13

ள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு, தனது மகள் சவுந்தர்யாவை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ததாக அவருடைய தந்தை சுவாமிநாதன் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, சவுந்தர்யா மற்றும் அவருடைய தந்தை சுவாமிநாதனையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

 

கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு. 38 பிரபு கடந்த வாரம் 19 வயதான சவுந்தர்யா என்ற இளம்பெண்ணை திடீர் திருமணம் செய்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், இந்த திருமண விவகாரம் பெரும் சர்ச்சையானது. தனது மகளை கடத்திச் சென்று, கட்டாயப்படுத்தி திருமணம் நடந்துள்ளதாக சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

 

கோயில் குருக்களாக இருக்கும் தம்மை, எம்எல்ஏ பிரபு தரப்பு ஆட்கள் மிரட்டுவதாகவும், தமது மகளை மீட்டுத்தரக்கோரியும் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட சுவாமிநாதன், திடீரென எம்எல்ஏ பிரபு வீட்டு முன் தீக்குளிக்க முயன்றதும் பெரும் பரபரப்பானது. இதனால் சுவாமிநாதன் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது.

 

இதற்கிடையே கடத்திச் செல்லப்பட்ட தனது மகளை மீட்கக் கோரி சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரி சுவாமிநாதன் தரப்பில் நீதிபதி சுந்தரேஷ் அமர்வில் இன்று முறையீடு செய்யப்பட்டது.

 

இதைத் தொடர்ந்து எம்எல்ஏ பிரபுவின் சவுந்தர்யாவை நாளை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி சுந்தரேஷ் உத்தரவிட்டார். மேலும் சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதனையும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்ட நிலையில் நாளை இந்த வழக்கு விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Right Menu Icon