மண்ணின் மைந்தனா ? உளறல் மன்னனா ? என்ற சுவரொட்டியால் இராமநாதபுரம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!
இராமநாதபுரம் நகரில் மண்ணின் மைந்தனா ? உளறல் மன்னனா ? மற்றும் செயல் நாயகனா ? அறிக்கை நாயகனா ? போன்ற சுவரொட்டிகள் ஒட்டியதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இது போன்ற சுவரொட்டிகள் யார் ஒட்டியது என்று தெரியவில்லை.இந்நிலையில் நகர் செயலாளர் கார்மேகம் மற்றும் இராமநாதபுரம் (தி மு க) ஒன்றிய பெருந்தலைவர் பிரபாகர் இணைந்து அவர்களது ஆதரவாளர்களுடன் சுவரொட்டிகளை கிழித்தெரிந்தனர்.

மேலும் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரையிடம் புகார் அளித்துள்ளனர்.






