பொறியியலில் சேரும் மாணவர்களுக்கான இணைய வழி கலந்தாய்வு..!
பொறியியல் படிப்பில் சேரும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இணைய வழி கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. பொறியியல் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது.
விண்ணப்பித்த ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 மாணவர்கள் தர வரிசையின் அடிப்படையில் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன .முதல் பிரிவை சேர்ந்த 12,263 மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது.
கட்டணம் செலுத்துவதற்கு நான்கு நாட்கள் விருப்ப கல்லூரிகளை வரிசைப்படுத்தி இறுதிப்படுத்த இரண்டு நாட்கள் வழங்கப்படுகின்றன. தோராயமான கல்லூரி ஒதுக்கீடு வழங்கப்பட்டு அதற்கு சரியா இல்லையா என்பதை உறுதிப்படுத்த இரண்டு நாட்கள் வழங்கப்படுகின்றன.
இதே முறையில்தான் நான்கு பிரிவு மாணவர்களுக்கும் அக்டோபர் 28ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வு நடைமுறைகள் கலந்தாய்வு அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.






