--- --:--:-- --

உ.பி.யில் ஹத்ரசுக்கு சென்ற ராகுல் காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல்..!

5.1

த்திரபிரதேச மாநிலம் ஹத்ரசில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தாரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி உத்திரபிரதேச காவல்துறையினரால் தாக்கப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க போவதாக இன்று காலை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் அறிவித்திருந்தனர். அதன்படி மதியம் 1:15 மணியளவில் டெல்லியில் இருந்து தங்களது கார் மூலமாக ஹத்ரஸ் செல்ல முற்பட்ட இருவரும் டெல்லி உத்தர பிரதேசத்தை இணைக்கும் டெல்லி எக்ஸ்பிரஸ் தேசிய நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

 

பிறகு இருவரும் நடந்து செல்ல முற்பட்ட போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேற்கொண்டு நடந்தால் கைது செய்யப்படுவீர்கள் என காவல்துறையினர் கூற எந்த பிரிவின்கீழ் என்னை கைது செய்வீர்கள் என ராகுல் காந்தி கேட்டு வாக்குவாதம் ஏற்பட துவங்கியது.

 

சிறிது நேரத்தில் ராகுல் காந்தி மீண்டும் நடக்கும் ஒரு பட காவல்துறையினர் ராகுல்காந்தியை நெஞ்சில் கைவைத்து தாக்க அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். லத்தி களைக் கொண்டு அங்கிருந்து அவர்களை கலைக்க முற்பட்டனர்.

 

இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி உத்தரபிரதேச காவல்துறையினர் தன்னை வேண்டுமென்றே லத்தியை கொண்டு தாக்கி தள்ளி விட்டுள்ளனர் என குற்றம் சாட்டினார்.

 

மேலும் ஹத்ரஸ் செல்லாமல் தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் சுதந்திர நாட்டில் பிரதமர் மோடி மட்டும் தான் நடக்க வேண்டுமா எனவும் ராகுல் கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ராகுல்காந்தி உத்திரப்பிரதேச காவல்துறையினரால் தாக்கப்பட்டதற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பஞ்சாப் முதல்வர் கேப்டன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கேசி வேணு கோபால் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Right Menu Icon