புதை குழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள்..!
பொலிவியாவில் புதை குழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மனித எலும்புகளை கொண்ட 6 ரகசிய கல்லறைகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
போதை பொருள் கடத்தல், அரசியல் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் காணாமல் போனவர்கள் உடன் இந்த எலும்புக்கூடுகள் ஒத்துப் போகிறதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு துறை துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.






