பெட்ரோல் டீசல் ரிடிங் எந்திரங்களில் குளறுபடி செய்து ஏமாற்றிய உரிமையாளர்கள்..!
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெட்ரோல் டீசல் ரிடிங் எந்திரங்களில் குளறுபடி செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் பங்குகளில் சோதனை நடத்திய காவல்துறையினர் பெட்ரோல், டீசல் விலை ஆய்வு செய்தனர்.
அப்போது அதிக அளவு ரீடிங் காட்டும் வகையில் இயந்திரங்களில் சிப்புகள் பொருத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது ஒரு லிட்டருக்கு 40 மில்லி மீட்டர் அளவிற்கு பெட்ரோல் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது.
ரீடிங் குளறுபடி செய்யும் இந்த சிப்பை ஒரு லட்சம் ரூபாய்க்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர் வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் மேலாளர் குளறுபடி சிப் பயன்படுத்தியவர், விற்பனையாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சித்தூர் மட்டுமல்லாது ஆந்திரா முழுவதும் 22 பெட்ரோல் பங்குகளும் தெலுங்கானா மாநிலத்தில் 11 பெட்ரோல் பங்குகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளன.






