--- --:--:-- --

அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த 5 பேரை சீன ராணுவம் கடத்தி சென்றதாக புகார்..!

15

ருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த 5 பேரை சீன ராணுவம் கடத்தி சென்று விட்டதாக புகார் எழுந்துள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அப்பர்சுவன்ஸ்ரீ மாவட்டத்தை சேர்ந்த சில பேர் சீன எல்லையை ஒட்டியுள்ள காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றதாக தெரிகிறது.

 

அவர்களை சீன ராணுவத்தினர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. சீன ராணுவத்திடம் இருந்து தப்பிய இருவர் தாங்கள் கடத்தப்பட்டது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சீன இராணுவத்துடன் 5 பேர் சிக்கியுள்ளதாக அவர் கூறினார்.

 

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மாவட்ட எஸ்பி சம்பவ இடத்திற்கு காவல் துறை அலுவலர்களை அனுப்பி விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon