--- --:--:-- --

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த விவசாயி தீக்குளித்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி..!

2

ர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே புறம்போக்கு நிலத்தில் இருந்த விவசாய ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற முயன்றதால் விவசாயி ஒருவர் அங்கேயே தீ குளித்தார். காரிமங்கலைத்தை அடுத்த தும்பளகள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட புறம்போக்கு மேய்ச்சல் நிலத்தில் சில ஏக்கர் நிலத்தை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் விவசாயத்திற்காக பயன்படுத்தி வந்துள்ளனர்.

 

ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்ற முடிவு செய்த அதிகாரிகள் நேற்று அதற்கான வேலைகளில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளுக்கும் விவசாயி களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் சின்னசாமி என்கிற விவசாயி திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

 

அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தோர் அவரை மீட்டு தீக்காயங்களுடன் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பாலக்கோடு காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகளை அழைத்து சென்றனர்.

Leave a Reply

Right Menu Icon