--- --:--:-- --

பாலிவுட்டில் இரண்டு முறை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறும் நடிகை சமீரா ரெட்டி..!

3

பாலிவுட்டில் இரண்டு முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி விட்டதாக நடிகை சமீரா ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். தமிழில் வாரணம் ஆயிரம், அசல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் சமீரா ரெட்டி இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

நடிகைகள் பலர் மீட்டு மூலம் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில் தற்போது சமீரா ரெட்டி ஒரு முறை முத்த காட்சியில் நடிக்க நிர்பந்திக்கப்பட்டதாகவும், மற்றொரு முறை ஒரு பிரபல நடிகருடன் இணக்கமாக நடிக்க மறுத்ததால் இனி அவருடைய படத்தில் நடிக்க முடியாது என மிரட்ட பட்டதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon