--- --:--:-- --

அக்‌ஷராஹாசனின் படம் ஓ‌டி‌டி தளத்தில் வெளியீடு..!

1

டிரெண்ட் லவுட் ஆன்லைன் தளத்தை தயாரிக்கும் முழுநீள திரைப்படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன் நாயகியாக நடிக்கிறார். அமேசான் ப்ரைம், நெட்ப்லிக்ஸ், ஜி5 போன்ற வலைதளங்கள் நேரடித் தொடர்களை தயாரிக்கின்றனர்.

 

அந்த வகையில் தற்போது டிரெண்ட் லவுட் என்ற நிறுவனம் புதிய முழுநீள திரைப்படத்தைத் தயாரிக்கிறது. ராஜா ராமமூர்த்தி என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் அக்சராஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். அறிவார்ந்த ஒரு இளம் பெண்ணுக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து அந்த தொடர் எடுக்கப்படுகிறது.

 

அக்ஷரா ஹாசன் ஏற்கனவே அஜித் நடித்த விவேகம், கமல்ஹாசன் தயாரித்த கடாரம் கொண்டான் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon