--- --:--:-- --

பிரதமர் மோடி ஆட்சியில் எல்லைகள் பாதுகாப்பாக இருக்கும்!

5

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பாக இருக்கும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

 

கேரள மெய்நிகர் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர் லடாக்கில் சீனாவுடனான பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையின் போது இந்திய சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதை சுட்டிக்காட்டி இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுப்பதாக கூறினார்.

 

உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்ட அவர் பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியாவில் நில ஒருமைப்பாடு சமரசம் செய்து கொள்ளப் படாது என்று தெரிவித்தார். தற்போது அரசியல் உறுதி இருப்பதாகவும் எத்தகைய எதிரியையும் எதிர்கொள்ள ராணுவம் தயாராக இருப்பதாகவும் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon