--- --:--:-- --

சீனாவில் மீண்டும் பரவி வருகிறதா கொரொனா!

10

பெய்ஜிங்கின் மிகப்பெரிய உணவுப்பொருள் சந்தையில் குழு குழுவாக கொரொனா பரவி வருவதையடுத்து அங்கு இரண்டாம் கட்ட அலைவீசும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நகரில் மொத்த தேவையை நிறைவேற்றக்கூடிய பெரிய சந்தையான நிஃப்டியில் பழங்கள், காய்கறிகள், இறைச்சி மற்றும் கடல் உணவுகள் விற்கப்படுகின்றன.

 

அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 36 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த சந்தை சீர்செய்யப்பட்டு துணை இராணுவப் படையினர் உரிய உடல் பாதுகாப்பு கவசங்களுடன் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

கொரொனா காலகட்டத்தில் சீனாவின் பாதுகாப்பான நகரமாக விளங்கிய பெய்ஜிங்கில் தொற்று பரவுவது சீன அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரண்டாம் அலையாக இது மாறக் கூடும் என அவசரமாக நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சீனாவின் துணை அதிபர் சுல்தான் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon