பாட்டி வீட்டிற்கு சென்ற பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பாட்டி வீட்டிற்கு சென்ற பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மகிழஞ்சேரி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகள் மோனிகா பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கும் மோனிகா நேற்று இரவு உறங்குவதற்கு அதே கிராமத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் வயல் வேலைக்கு சென்ற போது அங்கு காயங்களுடன் மோனிகா சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த நன்னிலம் காவல்துறையினர் மோகனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






