ஸ்டைரீனை சுவாசித்தால் ஏற்படும் ஆபத்து என்ன..?
விசாகப்பட்டினம் ஆலையில் இருந்து கசிந்த ஸ்டைரீன் வாயு எப்படி இருக்கும்? அதை சுவாசித்தால் எந்த உடல்நலக் குறைவுகள் ஏற்படும்? ஸ்டைரீன் என்பது மிக எளிதில் ஆவியாகக்கூடிய திரவம் நிலையில் சேமிக்கப்படுகிறது. இது நினல்பென்சில் என்றும் அழைக்கப்படுகிறது.
ஸ்டைரீன் நிறமற்றதாகவும் சில நேரங்களில் லேசான மஞ்சள் நிறத்திலும் காணப்படும். உணவு வைக்கும் பாத்திரங்கள் , பார்சல்கள், மேஜை விரிப்புகள் போன்றவற்றிற்காக பிளாஸ்டிக் தயாரிப்பில் ஸ்டைரீன்பயன்படுத்தப்படுகிறது.
ஸ்டைரீன் லந்த காற்றை சுவாசித்தால் மூக்கு மற்றும் தொண்டையில் எரிச்சல், மூச்சு இரைப்பு, இருமல் போன்றவை ஏற்படும். ஸ்டைரீன் வாயுவை அதிக அளவில் சுவாசித்தால் தலைவலி, வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
ஸ்டைரீன் வாயுவை சுவாசிக்கும் சிலருக்கு இதயத்துடிப்பு அதிகரித்து அவர் கோமா நிலைக்கும் செல்லக்கூடும். ரத்தப் புற்றுநோய், நிணநீர் புற்றுநோய் போன்றவற்றுக்கும் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.






