ஆலையில் இருந்து வெளியேறிய விஷவாயு…! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


விசாகப்பட்டினத்தில் நச்சுவாயு தாக்கிய சம்பவம் குறித்து பதிலளிக்க ஆந்திர மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையாக இந்த விவகாரத்தை மனித உரிமைகள் ஆணையம் கையில் எடுத்துள்ளது.

 

மீட்பு பணிகள், சிகிச்சை முறைகள், சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மனநல ஆலோசனைகள் குறித்தும் மத்திய ஆந்திர மாநில அரசுகளிடம் விரிவான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

 

இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான நபர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்வது போன்ற விசாரணை முறைகள் குறித்து அடுத்த நான்கு வாரத்திற்குள் தகவல் தெரிவிக்கவும் மனித உரிமைகள் ஆணையம் தனது நோட்டீஸ் மூலம் அறிவுறுத்தியுள்ளது.

 

விசாகப்பட்டினம் விஷவாயு தாக்குதல் சம்பவம் அப்பட்டமான மனித உரிமை மீறல் என கருத்து தெரிவித்துள்ள ஆணையம் கொரொனாவால் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்துவதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.


Leave a Reply