--- --:--:-- --

அரசு மதுபான டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் மதுபிரியர்கள் டோக்கன் வழங்கப்பட்டு, சமூக இடைவெளியில் மது விற்பனை போலீசார் பாதுகாப்பு

17

தமிழக அரசு சென்னை மற்றும் குறிப்பிட்ட இடங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் அரசு மதுபான கடைகளை திறக்க உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில்240கடைகளும் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது. திறப்புக்கு முந்திய நாளில் கம்பு கட்டி கடைகளின் முன்பு வட்டமிட்டு, மதுப் பிரியர்களுக்கு பாதுகாப்பு அரண்கள் அமைத்து வைத்தார்கள்.

 

காலை சுமார் 8 மணிக்கே ஒவ்வொருவராக வரிசைக்கு வந்தனர். கடை திறக்கும் போது100 க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். மதுப்பிரியர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு” புல்”பாட்டில் மட்டும் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும். இப்படியான கடும் கட்டுப்பாட்டுடன் விற்பனை தொடங்கியது. பொது மக்கள் எதிர்பார்த்து பயந்த மாதிரி எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை. அமைதியாக ஒருவருக்கு பின் ஒருவராக வாங்கி சென்றனர்.

திமுகவினர் கருப்பு பேட்ச் அணிந்து கொள்ள உத்தரவு அக்கட்சி தலைமையில் இருந்து வந்த நிலையில் ஒருவரை கூட கருப்பு அணிந்து பார்க்க முடியவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக் கட்சியின் நிர்வாகிகள் காரைக்குடியில் ஒன்று கூடி மது கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிவகங்கை மாவட்டத்தில் அமைதியான முறையில் மது விற்பனை நடைபெறுகிறது.

மாவட்ட போலீஸ் எஸ்.பி.ரோஹித் நாத் உத்தரவின் பேரில் அனைத்து காவல் உட்கோட்ட டி.எஸ்.பி.க்களின் மேற்பார்வையில் ஒரு டாஸ்மாக் கடைக்கு 10 போலீசார் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon