தொழிற்சாலையில் இருந்து கசிந்த விஷவாயு! கொரொனாவை விட மோசமான சாவு!

ஆந்திராவில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய விஷவாயு கசிவால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு சிலர் மயங்கி விழுந்தனர்.

 

திடீரென ஒரு குழந்தை உட்பட சிலர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். என்ன நடக்கிறது என்பதை யாரும் உணர்வதற்குள் பலருக்கும் கண் எரிச்சல், தொண்டை எரிச்சல், தோல் அரிப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இத்தகைய பிரச்சினைகள் உடன் கூடிய நூற்றுக்கணக்கானோர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்‌ஆர் வெங்கடபுரத்தில் இயங்கிவரும் என்ஜி பாலிமஸ் தொழிற்சாலையில் பாலித்தீன் பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. பொது முடக்கத்தால் இந்த ஆலை மூடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ஆலையிலிருந்து நச்சுவாயு வெளியேறியதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

 

தலைவலி, உடல் சோர்வு, காது கேளாமை ஏற்படுவதோடு நரம்பு மண்டலமே பாதிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உடனே அறையை சுற்றி இருந்த சுமார் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணி முடுக்கிவிடப்பட்டது.தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்தனர்.

 

சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் நச்சுவாயுக் கசிவு கட்டுப்படுத்தப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.

 

உயிர்களை காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய விசாகப்பட்டினம் நிறுவனத்திற்கு ஆளுநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply