--- --:--:-- --

மதுக்கடையை திறக்காதே – கொரனாவை அழைக்காதே கோஷமிட்டு பி.ஆர்.நடராஜன் எம்.பி தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம் !!!

15

கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மாநில அரசுக்கு போதிய நிதியை வழங்கிட வேண்டும், வேலையின்றி, வருவாயின்றி வீட்டில் முடங்கிக்கிடக்கும் உழைப்பாளி மக்களின் குறைந்தபட்ச இருப்பைக்கூட பறிப்பதற்கு மதுக்கடைகளை திறந்துவைத்த மாநில அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் மாநிலம் முழுவதும் கருப்பு சின்னம் அணிந்து கண்டன போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக கோவை காந்திபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் முன்பு மத்திய,மாநில அரசுகளை கண்டித்து கருப்பு சின்னம் அணிந்து கண்டன எம்பி.பி.ஆர்.நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் பத்மநாபன் உள்ளிட்ட பலர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.இதே போல் டாஸ்மாக்கை மூடக்கோரி மேட்டுப்பாளையத்தில் CITU தொழிற்சங்கம் சார்பில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதில் டாஸ்மாக் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இழுத்து மூடு இழுத்து மூடு டாஸ்மாக்கை இழுத்து மூடு என்ற கோசங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மேட்டுப்பாளையம் CITU பொது தொழிலாளர் சங்கம் சார்பாக மேட்டுப்பாளையத்தில் கருப்புக் குடைகளுடன்,கருப்பு பதாகை ஏந்தியும், செங்கொடிகளுடன்,சமூக இடை வெளியை கடை பிடித்து மேட்டுப்பாளையம் தாலுக்கா பொது தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் S.பாஷா தலைமையில் தொழிலாளர்கள் தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon