3 மண்டலங்களாக பிரிக்கப்பட்ட தமிழ்நாடு
ஊரடங்கு நீட்டிக்கப் படும் பட்சத்தில் நாடு முழுவதும் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளாகப் பிரிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவை சிகப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை ஆகிய மூன்று நிறங்களாக வகைப் படுத்தப் படலாம் என தெரிகிறது.
அதன்படி கணிசமாக பாதிக்கப்பட்டவர்களை கொண்டிருக்கும் மாவட்டங்களில் சிறப்பு நிற மண்டலத்தின் கீழ் உள்ளன. இந்த பகுதியில் எந்தவிதமான நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படமாட்டாது. ஓரளவு மட்டுமே கொரொனா தொற்று உள்ளவர்களை கொண்டிருக்கும் பகுதிகள் ஆரஞ்சு நிற மண்டலத்தின் கீழ் உள்ளன.
வரையறுக்கப்பட்ட பொது போக்குவரத்து பண்ணை அறுவடை போன்ற சில நடவடிக்கைகள் இந்த பகுதியில் அனுமதிக்கப்படும். இதற்கு அடுத்தபடியாக கொரொனா வைரசால் பாதிக்கப்பட்ட அவர்களை உள்ளடக்கிய பகுதிகள் பச்சைநிற மண்டலத்தின் கீழ் வரும்.
இங்கு அனைத்து விதமான நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படும் கூறி நீட்டிக்கப்பட்ட ஆறுவகை மண்டலங்களிலும் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் மதுபான கடைகளை நடத்த அனுமதி வழங்கப்படலாம் என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.






