--- --:--:-- --

டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை – உதயநிதி

2

சென்னையில் போராடிய மாணவர்களை கைது செய்ததற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதையடுத்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த குவிந்து வரும் இளைஞர்களை உடனுக்குடன் கைது செய்து அப்புறப்படுத்தும் காவல்துறை அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவை கைது செய்துள்ளனர். அதேபோல் சிஜேபி கட்சியினருக்கு ஆதரவு தெரிவித்து பெசன்ட் நகரில் போராடிய 30க்கும் மேற்பட்ட இளைஞர்களை குண்டுக்கட்டாக காவல்துறை கைது செய்தது. மேலும், சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

 

 

இந்த கைதிற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று பெசன்ட் நகரில் அமைதியாக போராடிய இளைஞர்கள் மீது காவல் அராஜகத்தை ஏவி கைது செய்துள்ள இந்த Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

 

ஒட்டுமொத்த நாடும் – இவர்கள் கூட்டணி வைத்திருப்பதாக சொல்லிக்கொள்ளும் சில கட்சிகளும் கூட இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் போது, இந்த Dummy முதலமைச்சர், யாருக்கு பயந்து நடுங்கி இந்தப் போராட்டத்தை நசுக்குகிறார். சுயமரியாதையும் – நாட்டின் மீதும் அக்கறையும் கொண்ட அறிவார்ந்த இளைஞர்களை கைது செய்வதன் மூலம், டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை என்பதை இந்த முதலமைச்சர் நிரூபித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்றத் துடிக்கும் இளைஞர் படையின் குரலை ஒடுக்குவதை ஏற்க முடியாது.” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

அதேநேரம், கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், “இன்று தமிழ்நாட்டில் போராடுபவர்களை தவெக அரசு ஒடுக்குவதைப் பார்க்கும்போது ஒன்று மட்டும்தான் உறுதியாகிறது. டெல்லியில் இருக்கும் தவெகதான் பாஜக, தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக!” என்று கூறியிருக்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon