--- --:--:-- --

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!

4

மிழ்நாட்டில் நாளை முதல் 5 நாள்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

 

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான வரையிலான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் தினமான நாளை முதல் 5 நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

இதனிடையே தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது. அதன்படி, மதுரை, தேனி, தென்காசி, கொடைக்கானல் சுற்றுவட்டாரங்களில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Right Menu Icon