--- --:--:-- --

மதுரை மாநகராட்சி கூட்டங்களில் அ.தி.மு.க புறக்கணிப்பு!

3

துரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது:-“தமிழ்நாட்டின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நீதிமன்றம் வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. அதே சமயம் ஊழலில் கைதான பொன் வசந்தின் மனைவியான இந்திராணி மதுரை மாநகராட்சி மேயராக இருந்து கூட்டங்களை நடத்துவது சரியல்ல.

 

அவர் பதவி விலகிய பின்னரே விசாரணை முறையாக நடைபெறும். எனவே அவர் பதவி விலகும் வரை மாநகராட்சி கூட்டங்களில் அ.தி.மு.க பங்கேற்காது. இதற்கான தீர்மானத்தை எங்கள் கவுன்சிலர்கள் அனைவரும் ஏற்றுள்ளனர். மதுரை மாநகராட்சி வரி முறைகேட்டில் கோடியே 21 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

ஆனால் இந்திராணி தொடர்ந்து பதவியில் இருப்பதால் விசாரணை திசைதிருப்பப்பட வாய்ப்புள்ளது. நீதிமன்றம் மற்றும் போலீசார் நேர்மையாக செயல்பட்டாலும் வெளிப்புற அழுத்தம் இருக்கிறது என்பதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

 

அமைச்சர் மூர்த்தி தனது தொகுதியில் டிபன் கேரியரை மட்டும் கொடுத்துவிட்டு கவனிப்பதை தவறிவிட்டார். ஊழல் குறித்து மக்கள் மத்தியில் இவர்கள் எப்படி முகம் காட்டுவார்கள்? மாநகராட்சியில் ஊழல் நடப்பதற்கு இவர்களும் காரணம். அமைச்சர் மூர்த்தி மதுரை மேற்கு தொகுதியில் சூரியன் மேற்கே உதிக்கும்.

 

அமைச்சர் மூர்த்தி நார்வே அல்லது ஸ்வீடனில் இருக்கிறாரா? அங்கே தான் சூரியன் மேற்கே உதிக்கும். எங்கள் கட்சி தனது கொள்கையில் இருந்து வழுவாது. எவருக்கும் எஜமானராகவும் அடிமையாகவும் இல்லை. அதிமுக தனித்துவ கொள்கையோடு இயங்கும் என அவர் தெரிவித்தார்.

Right Menu Icon