கோடை விடுமுறையில் ஆதார் புதுப்பிப்பு: பள்ளிக்கல்வித்துறை
கோடை விடுமுறை காலத்தில் ஆதாரை புதுப்பிக்க மாணவர்களை வலியுறுத்த வேண்டுமென்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் அருகிலுள்ள இ-சேவை மையங்கள், அஞ்சலகங்கள், வட்டார வள அலுவலகங்களில் மாணவர்களின் ஆதாரை புதுப்பிக்க தலைமை ஆசிரியர்கள் மூலம் பெற்றோரிடம் வலியுறுத்த கேட்டுள்ளது.





