பல்லவன் அதி விரைவு ரயில் பிரேக் பழுது.. ஓட்டுநர் செய்த செயல்..!
காரைக்குடி அருகே பல்லவன் அதிவிரைவு ரயில் பிரேக் பழுதானதால் ரயில் புறப்பட ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி செட்டிநாடு பகுதியில் சென்ற பொழுது ரயில் பெட்டியில் பழுது ஏற்பட்டு புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரயில் ஓட்டுநர் உடனடியாக பாதுகாப்பு கருதி அதே பகுதியில் ரயிலை நிறுத்தினார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் பழுது நீக்கும் பணியை மேற்கொண்டனர்.
பழுது சரி செய்யப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. இன்று அதிகாலை பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது.





