குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு..!
கனமழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது.
இதனால் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி சிற்றருவி உள்ளிட்ட 5 அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து குறையும் பட்சத்தில் குளிப்பதற்கு மீண்டும் அனுமதி அளிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






