--- --:--:-- --

புதிய விமான நிலையம் நிலம் எடுக்க மூன்றாம் கட்டமாக அறிவிப்பு..!

4

ரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராடிவரும் நிலையில் நிலங்களை எடுப்பதற்கான 3ம் கட்ட அறிவிப்பு நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

 

பரந்தூர் விமான நிலையம் அமைந்தால் விவசாய நிலங்கள், நீர் நிலங்கள் குடியுரிவு பகுதிகள் பாதிக்கப்படும் எனக்கூறி ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் நடத்தி வருகின்றனர். நிலங்களை பார்வையிடுவதற்கும் அளவீடு செய்வதற்கும் அரசு அதிகாரிகள் அனுமதிக்காமல் இருந்தனர்.

 

இந்த சூழலில் இருப்பதற்கான அறிவிப்புகளை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நாடுகளில் வெளியிடப்பட்டு வருகிறது. மூன்றாவது கட்டமாக அறிவிப்பில் சர்வே எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

மொத்தம் 445 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் இன்று முதல் ஒரு மாதத்திற்குள் புதிய விமான நிலைய திட்ட நிலம் எடுப்பு அலுவலகத்தில் நில உரிமையாளர்கள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

 

Right Menu Icon