நிர்வாண படம் காட்டி மிரட்டல்..பிரபல யூடியூபர் மீது புகார்..!
பிரபல யுடியூபர் ஹர்ஷா சாய் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெலுங்கு நடிகைகளின் அடிப்படையில் உள்ள சூழலில் உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என ஹர்ஷா சாய் விளக்கம் அளித்துள்ளார்.
இலவச பெட்ரோல் பங்க், சப்ஸ்க்ரைபர்களுக்கு போட்டி வைத்து பரிசுகளை வாரி வழங்குவது, உணவகம் அழைத்துச் சென்று மகிழ்விப்பது, விலை உயர்ந்த பொருட்களை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுப்பது என இவரது செயல்கள் ஒவ்வொன்றையும் வீடியோவாக பதிவிட்டு வரவேற்பை பெற்றுள்ளார்.
ஹர்ஷா இன் வீடியோக்கள் தமிழிலும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ள நிலையில் youtube ஹர்ஷா சாய் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வைத்து மிரட்டி 2 கோடி ரூபாய் வரை பணம் பறித்து இருப்பதாகவும் சினிமா தயாரிப்பாளரும் நடிகையுமான மித்ரா சர்மா ஹைதராபாத் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் பாலியல் வன்கொடுமை நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து மிரட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக ஹர்ஷா சாய் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என ஹார்ஷா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





