ஆம்புலன்ஸ்களுக்கு பூட்டு போட்ட போக்குவரத்து காவலர்கள்..!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகே தனியார் ஆம்புலன்ஸ்களை நிறுத்துவதற்கு போக்குவரத்து காவல்துறையினர் மாமூல் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனை பகுதியில் அவசர தேவைக்காக தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இதேபோன்று சாலையை ஆக்கிரமித்து ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை விட்டுவிட்டு போக்குவரத்து விதிமீறல் எனக் கூறி தனியார் ஆம்புலன்ஸ்களின் சக்கரங்களை மட்டும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் பூட்டு போட்டு விட்டதாக கூறப்படுகிறது என்று போக்குவரத்து காவலர்கள் கூறுவதாக தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஒருதலை பட்சமாக செயல்படும் போக்குவரத்து போலீசாரை கண்டித்து பூக்கடை போக்குவரத்து காவல் நிலையத்தை முற்றுகையிட போவதாகவும் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.





