--- --:--:-- --

ரயிலில் மயிலாடுதுறைக்கு புறப்பட்ட முதலமைச்சர்..!

3

ரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில் மூலம் மயிலாடுதுறை புறப்பட்டார். சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் விரைவு ரயிலில் முதலமைச்சர் ஸ்டாலின் மயிலாடுதுறைக்கு புறப்பட்டார்.

 

ரயில் நிலையத்தில் திரண்டிருந்த திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர். இரவு 8:15 மணிக்கு சீர்காழி ரயில் நிலையத்தில் இறங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறவினர் வீட்டில் ஓய்வு எடுக்க உள்ளார்.

 

நாளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கும் அவர் மாலை மீண்டும் ரயில் மூலம் சென்னை திரும்புகிறார்.

 

Right Menu Icon