அஞ்சலிக்கு பிறகு நாளை சாந்தனின் உடல் நல்லடக்கம்..!
இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சாந்தனின் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகால சிறை தண்டனைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் தங்கி இருந்தார்.
சிகிச்சைக்காக இலங்கை அனுப்ப கோரிக்கை விடுத்திருந்த நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த 28ஆம் தேதி சாந்தன் உயிரிழந்தார்.
அதையடுத்து அவரது உடல் சொந்த நாடான இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு கொழும்புவில் உள்ள மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சாந்தனின் உடலுக்கு முன்னால் போராளிகள் அஞ்சலி செலுத்தினார்.
கட்சி பிரமுகர்கள், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு யாழ்ப்பாணத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சொந்த ஊரில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் சாந்தனின் உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.





