--- --:--:-- --

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு..!

5

டந்த சில நாட்களாக காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மூன்று நாட்களாக தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

அரவிந்தன் என்பவரது மகள் சிக்கானா குப்பம் பகுதியில் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவரை பெற்றோர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

அங்கு அவருக்கு காய்ச்சல் குறையாததால் கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர், அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இதனால் தொடரும் உயிரிழப்புகளை கணிக்க சுகாதாரத் துறையினர் பள்ளி மாணவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகள் நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon