--- --:--:-- --

இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூரம்..!

9

விருதுநகர் அருகே கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு கிணற்றில் வீசப்பட்ட இளைஞரின் உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டி அருகே ரங்கராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் சாக்கு முட்டையில் மனித உடல் ஒன்றும் மிதந்துள்ளது.

 

தகவலின் பெயரில் வந்தபோது போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடந்து வந்த விசாரணையில் உயிரிழந்த நபர் கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆத்தியப்பன் என தெரியவந்தது.

 

பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருப்பதால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon