முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆபத்திருப்பதாக மனைவி மனு..!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கடுமையான அச்சுறுத்தல் இருப்பதாக அவரது மனைவி புஷ்பரா பிவி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் தனது கணவரை சந்திக்க உள்ளதாகவும் அப்போது அவரது உடல்நிலை சீர் கெட்டதை கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அவருக்கு இந்த தண்டனை கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் மேலும் அவரது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் உள்ளதாக அஞ்சுவதால் தீவிர கவனம் எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.






