கொலையை தடுத்து நிறுத்திய காவலர்களுக்கு பாராட்டு..!
மதுரையில் துரிதமாக செயல்பட்டு ஒரு கொலையை நடைபெறாமல் தடுத்த காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். மதுரையில் மே மாதம் 14ஆம் தேதி சோலை அழகுபுரத்தை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக ரமேஷ் என்பவர் ஜாமினில் உள்ளார். இவர் தினமும் தெற்கு வாசல் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வரும் நிலையில் இவரை பழிக்கு பழியாக கொலை செய்ய ஆனந்தகுமாரின் நண்பர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக தெற்கு வாசல் அருகே பதுங்கி இருந்தனர். இது குறித்து ரகசியமாக தெரிந்து கொண்ட காவல்துறையினர் பதுங்கி இருந்த 12 பேரையும் ஆயுதங்களுடன் கைது செய்தனர். மதுரையில் காவல்துறையினரின் இந்த துரித நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.





