--- --:--:-- --

எல்லாரும் ‘டிபி’யில் இந்த படத்தை வையுங்கள் என பிரதமர் மோடி வைத்த கோரிக்கை..!

6

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக வலைதள கணக்குகளில் தேசிய கொடியை முகப்பு படமாக வைக்க கோரி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்துள்ளார்.

 

நாடு முழுவதும் சுதந்திர தினத்தை போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேச ஒற்றுமை சுதந்திரத்தின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் மூவர்ண கொடியை ஏற்றி வைக்குமாறு பிரதமர் மோடி ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார்.

 

இந்த நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் சமூக வலைதள கணக்குகளில் தேசிய கொடியை முகப்பு படமாக வைக்க பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து சமூக வலைதளத்தில் தன் புகைப்படத்தை நீக்கிவிட்டு மூவர்ண தேசிய கொடியை பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.

 

Right Menu Icon