கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் மூட்டைகள்..!
கடலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஐந்தாயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகின.
பெண்ணாடம் ஆதீனங்குடி முருகன் குடி, வெண்கறும்பூர், வடகரை, தாலநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. தொடர் மழையால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்ட ஐந்தாயிரம் மூட்டைகள் மழையில் நனைந்து செய்தமடைந்தன.
எனவே ஈரப்பதத்தை கணக்கெடுக்காமல் கணக்கில் கொள்ளாமல் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் மண்டல மேலாளரிடம் கேட்டதற்கு உடனே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.





