8வது நாளாக கால்வாய் வெட்டும் பணிகள் தீவிரம்..!
விவசாயிகள் அரசியல் கட்சிகளின் போராட்டம் மற்றும் நீதிமன்றத்தின் எதிர்ப்பை மீறி மேல்மலையான் தேதியில் கால்வாய் வெட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் உள்ளிட்டோரின் கடும் எதிர்ப்பையும் மீறி என்எல்சி நிறுவனத்திற்காக விலை நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணிகள் எட்டாவது நாளாக தொடங்குகின்றன.
NLC சுரங்க விரிவாக்க பணிகளுக்காக மேல்மலையம்மா தேவி கிராமத்தில் விளைநிலங்களின் இடையே பரவலாக வாய்க்கால் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நெற்பயிர்கள் விளைந்திருந்த நிலையிலும் பொக்லைன் இயந்திரங்களை இயக்கி பயிர்களை அழித்து நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியதற்கான விவசாயிகள் அதிர்ச்சி அரசியல் கட்சிகளுடன் சென்னை உயர்நீதிமன்றமும் கடும் கண்டனங்களை தெரிவித்தது.
வாய்க்கால் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இவை எல்லாம் ஒரு புறம் இருக்க பரவலாக வாய்க்கால் திட்டத்தை விரைந்து முடிக்க முனைப்பு காட்டி வரும் என்எல்சி நிறுவனம் காவல்துறை பாதுகாப்புடன் அவசர அவசரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது.
வழக்கமாக பகலில் மட்டும் பணிகளை மேற்கொண்ட நிலையில் கடந்த மூன்று நாட்களாக இரவிலும் வாய்க்கால் வெட்டும் பணிகளை தொடர்ந்து வருகிறது. இன்று எட்டாவது நாளாக பணிகள் தீவிரமடைந்துள்ளன.





