--- --:--:-- --

திருப்பதியில் பாத யாத்திரை செல்லும் வழியில் திடீரென வந்த கரடி..!

2

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நடந்து செல்லும் மலைப்பாதையில் கரடி வந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக நடந்து செல்லக்கூடிய மலை பாதையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் கரடி ஒன்று வனப்பகுதியில் இருந்து வந்தது.

 

அதனை பார்த்த பக்தர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே கடந்த மாதம் சிறுத்தை இதே பாதையில் வந்து நான்கு வயது சிறுவனை தாக்கி சென்றது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon