--- --:--:-- --

கணவர் கண் முன்னே பிரிந்த மனைவியின் உயிர்..!

10

ல்லாவரம் அருகே கணவர் கண்முன்னே லாரி மோதியதில் மனைவியின் தலை துண்டாகிய சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. மனைவியின் உடலை பிடித்து கதறி அழுத கணவரின் கண்ணீரோ பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கிறது.

 

பல்லாவரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள். இவரது கணவர் சின்னையா. தனியார் நிறுவனத்தின் பணி புரிந்து வருகிறார். பல்லாவரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக கணவர் இருசக்கர வாகனத்தை ஓட்ட மனைவி நாகம்மாள் பின்னால் அமர்ந்து கொண்டு திருமுடிவாக்கம் நோக்கி கனகாவத்தூர் அருகே காலை 5.30 மணிக்கு சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து மாடு மீது மோதியுள்ளது.

 

பின்னால் அமர்ந்திருந்த மனைவி வலது பக்கமாக சாலையில் விழுந்த வேகத்தில் எதிரே வந்த தண்ணீர் லாரி தலையின் மீது ஏறியது. தலை தனியாக துண்டாகி தூக்கி வீசப்பட்டதை பார்த்த லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.

 

மனைவி தலை துண்டாகி இருந்ததை பார்த்த கணவர் மனைவியின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சி அங்கு இருந்தவர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

Right Menu Icon