--- --:--:-- --

அவிநாசி சாலையில் கேஸ் டேங்கர் லாரி தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு..!

6

விநாசி அருகே சாலையில் கேஸ் டேங்கர் லாரி தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து சென்னை நோக்கி கேஸ் லாரி சென்று கொண்டிருந்தது.

 

இந்த லாரி திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பலக்கரை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது லாரியில் தீப்பிடித்துள்ளது. ஓட்டுனரின் இருக்கை அருகே ஏற்பட்ட தீ கொழுந்து விட்டு எறிந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

 

இந்த தீ விபத்தில் லாரியின் முன் பகுதி முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. தீப்பிடித்த டேங்கர் லாரியின் கேஸ் வெளியேறாதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon