35 அடி ஆழக்கிணற்றில் தவறு விழுந்த 2 வயது தம்பியை காப்பாற்றிய சிறுமி..!
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் 35 அடி ஆழக்கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தையை, துணிச்சலாக இறங்கி எட்டு வயது சகோதரி காப்பாற்றினார். மாவில்லிக்கரா பகுதியில் வீட்டின் முன்பு தனது இரு சகோதரிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளான்.
இதனை பார்த்த அவரின் சகோதரி கத்தி கூச்சலிட்டுள்ளார். அவரின் தாய் தடுத்தும் கேட்காமல் அவரது எட்டு வயது சிறுமி தனது தம்பியை தானே காப்பாற்ற போவதாக கூறி கிணற்றின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார் குழாய் வழியாக கிணற்றுள் இறங்கி தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த தனது தம்பியை அணைத்து தூக்கி குழாயை பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுதுதான் உதவிக்கு வந்த வடமாநில தொழிலாளி ஒருவர் கயிறு கட்டி கிணற்றுள் இறங்கி குழந்தையை மீட்டு மேலே கொண்டு வந்த நிலையில் சிறுமியின் கயிற்றை பிடித்து தானாகவே மேலே ஏறி வந்துள்ளார். இதனை கேள்விப்பட்டு பலரும் சிறுமியை பாராட்டி பரிசு பொருட்களை வழங்கி செல்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





