நோயாளி இறந்ததால் சிகிச்சை அளித்த மருத்துவ மாணவரை தாக்கிய உறவினர்கள்..!
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் ஆனவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதாக மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர் அபிஷேக் என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்பொழுது நோயாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவரின் உடல்கள் மாணவர் அபிஷேக்கை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி பொறுப்பு முதல்வர் ஆயிஷா தெரிவித்த பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





