17 வயது சிறுமிக்கு காதல் திருமணம்..தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்..!
சென்னையில் திருமணமான 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது கணவர் உள்ளிட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெருங்குடியை சேர்ந்த 17 வயது சிறுமியும் மதுராந்தகம் அருகே நாகமலை கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்று இளைஞரும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
மாமியாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்றோர் வீட்டிற்கு வந்து சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. சரத்குமார் மற்றும் அவரது தந்தையை கைது செய்த போலீசார் தலைமறைவான சிறுமியின் மாமியாரை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





